மகிந்தவுக்கும் சுதந்திரக் கட்சியினருக்கும் இடையில் சந்திப்பு!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு இன்றைய தினம் இடம்பெறவுள்ளது. அத்துடன், பிரதமர் மகிந்த ராஜபக்சவுககும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்றும் இன்று மாலை இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதிதுவப்படுத்தி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துக்கொள்ளவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.